என்னவளை சிந்தையில்
எண்ணிச் சுமந்து
ஏங்கிய நாட்கள்
நைல்நதியின் நீளமாய்….
மங்கிய நினைவுகளின்
நிழலாய் வருவேன்
என வந்தாய்
துணையோடு
இளமை கடந்தும்
அழியாத அன்பிலும்
எண்ணத்திலும் மாற்றம்
ஏதுமில்லை
கண்ணீர் சாட்சியாக
மெய் தீண்டும்
மோகம் இல்லை
தாபமில்லை
உள்ளதை உரைத்தேன்
உள்ளத்தின் பரிமாறலில்
அன்பே பிரதானமாகக்
காத்திடுவேன்
என்றும்
காமம் இல்லாக்
காதலை காலத்திற்கு
ஏற்பப் பருகுவோம்
கோல்டு காஃபியாக☕️
பத்மாவதி
படம் பார்த்து கவி: கோல்டு காஃபி
previous post