சாயம் தோய்த்த தூரிகையை கரங்களில் எடுத்தால் …..
சுவர்கள் வண்ணம் பெறுமே….
இதனால்……..
தூரிகைக்குப் பெருமை அன்றோ?
மாயமறியா எழுதுகோலினை கரங்களில் எடுத்தால்
காகிதமதில் எண்ணச் சிதறல்கள் தெளிக்கப்பட்ட உடன்
வலியில்லா கவிதை
குழந்தை பிரசவமாகி
மகிழ்ச்சியில் ஆழ்த்துமே……
இதனால் கவிஞியான
காரிகைக்கு பெருமை அன்றோ?
உஷா முத்துராமன்
