நூல்களின் சிக்கல்
பொறுமைக்கு வந்த சோதனை வார்த்தையில் சிக்கல்
உறவு நட்புகளுக்கு வந்த சோதனை.
ஆனால் காய்களுடன் தயாரிக்கப்பட்ட
நூடுல்ஸ் சிக்கல் வராது
ருசியும் அதிகம் என்பதால்
பசியுடன் இருக்கும் யாருக்கும் பிடிக்கும்
ஆனால் சிக்கலில் சிறந்த
சிக்கல் இடியாப்ப சிக்கல்
தேங்காய் பாலுடன் நாட்டுச்
சர்க்கைரையும் ஏல பொடியும் கலந்து இடியாப்ப சிக்கலில் ஊற்றினால்
விக்கல் என்ற தடைக்கலின்றி
மெல்ல மெல்ல உணவு பாதையில் வழுக்கிச் சென்று நாபியை நிரப்புமே! இடியாப்ப சிக்கலை ரசிப்போம்.
காய்களுடன் செய்யப்பட்ட நூடுல்ஸ் ருசிப்போம்
வாழ்க்கை சிக்கலை துவைப்போம்
உஷா முத்துராமன்
