சிறியதோ பெரியதோ
புடைப்போ
சப்பையோ
முகத்தில் முன்னணி அடையாளம்
மூக்கு தானே.
கண்ணீரின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் இதுதானே.
அடைப்பில்லாமல் போகும் வழியும் வரும் வழியும்
பராமரித்தல் ஒரு கலை.
புகைப்பிடித்தலின் நீட்சியாக வெளியே வருகிறது சிகரெட் புகை.
இறந்த பின்பு பஞ்சடைத்து வழியனுப்பும் மரபில் வஞ்சம் இல்லை எப்போதும்.
அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா.