படம் பார்த்து கவி: சீராக ஓடல்

by admin 2
47 views

ஜாக்கிங்(சீராக ஓடல்)

ஒளிந்து தவழ்ந்தாடும்
மழலை மனமறியா ஓட்டம் மருந்தென்று;

ஓடி விளையாடும் விடலை விடை அறியா,
ஓட்டமும் நல்லதென!

நடு வயது நான் தொடவே,
ஓடி🏃🏃 ஓடி🏃🏃 களைத்த கனம் இளைப்பாற இடம் தேட,
தூரம் ஒரு குரல் எதிரொலிக்க…… திரும்பி 👀👀பார்த்த அக்கணமே…..

ஓடு…… ஓடு ……
உன் வாழ்க்கைக்கு அல்ல,
வாழ்விற்கு என…..

ஓய்விற்கு இடமல்ல;
ஓட்டமே வாழ் வானது!!!!

மரியா நித்யா

You may also like

Leave a Comment

error: Content is protected !!