படம் பார்த்து கவி: ஞானம்

by admin 1
47 views

*ஞானம் *
புத்தனுக்கு போதிமரம் சித்தனுக்கு சிவனடி;
பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையில்
நாம் வாழும் நாட்களுக்கும்;
வாழ்ந்த நாட்களுக்கும்;
நாமே பொறுப்பாகிறோம் ;….
நம்மை மீறி நடக்கும்
செயல்களை விதி என்கிறோம்;
நம் அனுமதியின்றி நடக்கும்
செயல்களை சதி என்கிறோம்;
நமக்கு சாதகமாகும் செயல்களை
மதி என்கிறோம்;
எத்தனை நாட்கள் வாழ்து விட போகிறோம் பூமி மீது,
அதற்கு ஒரு பாதை
அதற்குள் ஒரு பயணம்;…
எட்டா கனியாகும்
அனைத்தையும்
எட்டி பிடிக்க எத்தனை
போறாட்டம் எதற்கிந்த
ஆர்ப்பாட்டம்;…
இறைவனின் ஆசியில் ஞானத்தினால் முக்தி பெற்று
அரக்க குணம் கொண்ட மனிதனும்
அடங்கி போகிறான்
இறைவன் கையில்;….

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!