நிறம் தரம் வேறெனினும்
நிரப்பிடும் நீரின் தரம்
நிரந்தரமன்றோ
தன்னிகரிலா தண்ணீரிலும்
தரம்( விலை )வைத்து தராதரமற்றுப்போகிறோம்
வெளியழகில் ஒன்றுமில்லை
உள்ளுணரப்படிலென,
வெளிப்படையாய் உள்ளுணரச் செய்யும் உதாரணமாய்..
வண்ணமும் வடிவமும் வேறெனினும்
எண்ணமெலாம் தாகம் தீர்ப்பதுவே!!
குமரியின்கவி
சந்திரனின்சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா
