அயராது உழைத்தவர்கள்
களைப்பு நீங்க தங்கள்
சிரம் வைத்தால் போதும்
தாயின் மடியில் வைத்த
சேயின் களைப்பு நீங்க
வைக்கும் நீயும்
அனைவரும் விரும்பும்
தாயின் மடியோ?…….
உன் வடிவம் பிடித்தவர்
அங்கத்தின் எப்பாகத்தையும் பங்கமின்றி வைக்கத் தோன்றுவதால்
சங்கத்தமிழ் போல் நீ
இனிமையானது ஒரு பொருளன்றோ? உன்னைத் தேடுபவருக்கு
கண்ணை மூட வைத்து
காட்டுவது சொர்க்கம்….
உஷா முத்துராமன்