மடியிலே மலராய் மலர்ந்த சேய்,
தாயின் கேசத்தின் மணம் விரும்பியதால் .
சிரிப்பு வதனத்துடன் கையில் ஏந்தியது
பூரிப்போடு தாய் மனமும் மலர்கிறது.
மடியில் அமர்ந்த சேயின் சேட்டையில்,
ஆதரவு தரும் தாய் நிழலாய் இருந்து ரசித்தாள்.
தாய் சேய் பந்தத்தில் இணைப்பு பாலம் இதுவன்றோ…
கனவுகள் நிறைந்த தாயின் கனவு நிறைவேறியதே .
இருவரின் பாசம் எந்நாளும் இணைந்து,
இயற்கையே பாடும் அன்பின் ஓவியமாக
ரசிக்க வைக்கிறது
உஷா முத்துராமன்
படம் பார்த்து கவி: தாயும் சேயும்
previous post