என் தலைமுடியை இழுத்து சிரிக்கும் உன் கை, நான் ரசிக்கத் தொடங்கிய முதல் வலி இது.
உந்தன் சிரிப்பில் என் உலகம் தலைகீழாகிறது, தாயின் பாசம் இன்றி இவ்வுலகில் வேறு எது பெரிது?
என் குழந்தை, உன் சின்ன கைகளில் என் வாழ்க்கை முழுதும் அடங்கியுள்ளது.
நீ சிரிக்கையில், என் உலகம் சிரிக்கும்.
என் முடியைப் பிடித்துக் கொண்டு நீ செய்யும் சேட்டைகள், எனக்கு இனிமையாகவே உள்ளது.
இந்தக் கணம் போதும் என் வாழ்நாள் முழுதும், உன் சிரிப்பில் நான் கண்டது சொர்க்கம்.
இ.டி.ஹேமமாலினி
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: தாய்மை!
previous post