படம் பார்த்து கவி: திண்டு

by admin 2
39 views

நால்வர் சாய்ந்து அமர
நீள பஞ்சணை
அந்தக் கால
மாநாடுகளின்
அடையாளம்
இங்கு
படுக்கப் பாய்
தலையணை
இல்லாதோரிடையே
பஞ்சணையை
ஒருவர் மீது ஒருவர் எறிந்து
விளையாடும்
காதலர்களும் உண்டு

க.ரவீந்திரன்‌

You may also like

Leave a Comment

error: Content is protected !!