தூய தமிழில் பாவாடை
ஆங்கிலத்தின் ஸ்கர்ட்
அதை விட கவுண் இப்படி பல பெயர்கள் கொண்ட நீ
அழகானவள் தான்…!
முதலில் நீ அறிமுகமானது
பெண்களின் உள் பாவாடையாக
கணுக்கால் வரை இருந்த நீ
பிறகு முட்டிக்கு கீழே இருந்தாய்…
பின் கொஞ்சம் முட்டிக்கு மேலே வந்தாய்…
இப்போ தொடை வரை வந்து இருக்கிறாய்…
நீயும் என்ன தான் செய்வாய் காலம் மாறும் போது மனிதர்களின் மனங்கள் போல மாற தானே வேணும்…
இல்லை என்றால் இந்த சமூகம் பைத்தியக்கார பட்டம் கட்டி விடும்…
எத்தனை கலரில் எத்தனை வடிவங்களில் நீ மாறினாலும் அழகாக தான் இருக்கிறாய்
பெண்களின் பருவங்கள் போல…!
( மிதிலா மகாதேவ்)