ருசி பார்த்த பின் இனிப்பு இல்லையே என்றாய்… உன் இதழ் இனிப்பளவு இல்லை என்பது உண்மை தான் அதற்காக ஒரு முத்தம் கேட்டால் தரப் போகிறாயா என்ன
கொஞ்சம் சக்கரை மட்டும் கொடு என்றேன்…
வெட்கப்பட்டு என்னை வெட்கப் பட வைத்தாய்…
சர்க்கரை அங்கிருக்க உன் இதழ் பட்ட காலி தேநீர் கோப்பைகளை எறும்புகள் மொய்க்கின்றன…
ஒரு வெட்கம் ஒரு கொஞ்சல் அப்படியே ஒரு முத்தம் இத்துடன் ஒரு சக்கரை இல்லா தேநீர் போதுமென்றேன்… ஏன் வேண்டாம் சக்கரை என்றாய் உன் வெட்கமே சக்கரை தான் அதோடு இன்ன பிறவும்… பிறகேன் கேட்கப் போகிறேன் சக்கரை…
சக்கரையால் செத்தவனுக்கு பாயாசப் படையல் திதியாம்…
கங்காதரன்