விடிந்ததும் விடியா
காலைப் பொழுது,
வான மகள் தம் துணைவனை தேடி காத்திருக்க,
வெண்பனி போர்த்திய
புல்வெளிகள் தம் போர்வை களைய காத்திருக்க,
வேகம் எடுத்தனர்
நகர வாசிகள்,
கடற்கரையும்,
பூங்காக்களையும் நோக்கி….
நடைபாதையை ஆக்கிரமித்து உறங்கி கொண்டுள்ளோரை அருவருப்புடன் நோக்கி….
குறையாத கொழுப்பை குறைக்க ஓடும் பணம் படைத்தோரே?
உங்களுக்கு எங்கே தெரியும்.
ஓடி ஓடி உழைத்து களைத்து உறங்க இடமில்லாமல், வெயிலிலும்,
மழையிலும் உழன்று திரியும் தெருவோரவாசிகள்
தேகம் தேக்குமரம்!
இயந்திரங்களின் துணையே,
உம் எடை ஏற்றத்தின் காரணி.
உண்டு கொழுத்து, உடல் பெருத்த குண்டர்களுக்கே, நடை அவர்தம் ஆரோக்கியத்தின் திறவு கோல்!
உங்களின்
நடை
தெருவோரவாசிகள்
ஆரோக்கியத்திற்கு என்றுமே தடையல்ல…
உறக்கத்திற்கே தடை…
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: நடை ஆரோக்கியத்தின் திறவு கோல்
previous post