நாற்காலி சண்டைகள்
முடிவதில்லை..
அமர்ந்தவன்
எழுந்து கொள்ள
தயாரில்லை…
அவன்,
அவன் மகன்,
அதன் பிறகு
அவன் பேரன்,
என
தொட்டு தொடரும்
பாரம்பரியம்…
தலைவனின்
குடும்பத்திற்கு
சாமரம்
வீசியே
பழகிப் போன
அப்பாவி தொண்டன்..
அவன் கொடுக்கும்
அற்ப காசுக்கு
வாக்களிக்கும்
பொது ஜனம்…
இது தொடரும்
என் இந்திய
ஜனநாயகம்
வாழ்க !வாழ்க!வாழ்கவே!
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)