படம் பார்த்து கவி: நிலமகளின்

by admin 1
41 views

நிலமகளின் கோபம் உன்னையும் தொற்றிக் கொண்டதோ!
நீயும் அவளும்
உடன்பிறப்பென்பது
உலகறியும்!

உன்னுள் வாழும்
உயிர்களின் சுவாசம்
தாங்குபவள்!
ஜனனமோ மரணமோ
நீயே சாட்சி!
பின்னே ஏனிந்த
ஆர்ப்பரிப்பு!

உந்தன் இக்கரை கண்டவர் _ அக்கரை
பச்சை என்று
சொல்ல முடியுமா?

உந்தன் இரகசியம்
உன்னையன்றி யாரறிவர்!
உந்தன் அழகை
என்னையன்றி யார்
இரசிப்பர்!
உன்னை பார்த்துக் கொண்டே இருந்து பசியாற்றுபவள்! ஏனெனில் உன்னை ஆராதிக்கும் ஆயிரமாயிரம் பேரில் நானும் ஒருத்தி!

கற்பனைகெட்டா சாகரம் நீ!
உலகின் சாகா வரம் பெற்றவளும் நீயே!
உன்னை வணங்கி வேண்டுகிறேன்!
நீயும் அமைதியாயிரு..
மனிதம் தழைக்க
உதவியாயிரு..!!

✍🏼தீபா புருஷோத்தமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!