பெண்களின் பாதுகாப்பு வேண்டி அமைதியான ஊர்வலம்
சலசலத்தது குள்ளநரி கூட்டம் ஒன்று உள்ளே புகுந்ததால்
பிறப்பெண் மானம் காக்க போராடிய பெண்களின் மானம் காற்றினில் பறந்தது
தென்றலாய் வந்த பெண்கள் புயலாக மாற தென்றல் புயலானால் தாங்குமோ பூமி
தேவியானால் வணங்கலாம்
காளியானால்..
கலங்கி ஓடியது நரிகள்
வேடிக்கை பார்த்த ஓநாய்கள்
கூட்டத்தை தாக்க
அமைதி ஊர்வலம் ஆர்ப்பாட்ட போராட்டமாகியது
நிராயுதமாக இருந்தவர்களை காக்க
நீரை ஆயுதம் ஆக்கினர் காவலர்
நீள் குழல் வழியாக நீரை பீச்சியடிக்க
ஓநாய்கள் ஓடியது திசைக்கொன்றாய்
சிறைபிடித்தபின் அமைதியானது கூட்டம்
பெண்ணே
நகம் பல் ஆயுதம் கொண்டு காத்துக்கொள் என்றனர்
மிளகாய் மிளகு தூள் கொண்டு காத்துக்கொள் என்றனர்
பெண்ணை
சக உயிராய் பார் ஆணே என்று சொல்லுவார் யாரோ
— அருள்மொழி மணவாளன்.