நீல நிறம் கொண்ட வானிர்க்கு எல்லை இல்லை…
அதேபோல் நாம் கொண்ட கனவுகளுக்கும் எல்லை என்பது இல்லை…
அதே வானம் இருள் சூழ்ந்து இருக்க அதில் வெண்ணிறமாய் ஜொலிக்கும் வெண்ணிலா….
அதே இருளும் வெள்ளையுமாய் நம் வாழ்வில் நிறைந்திருக்கும் இன்பங்களும் துன்பங்களும்….
நம் இயற்கை அன்னையின் வண்ணம் பசுமை என்னும் பச்சை நிறம்….
நம் அன்னையின் பசுமையை காணுகையில் நம் மனதினுள் எத்தனை எத்தனை நிம்மதி….
பூக்களில் எத்தனை எத்தனை வண்ணங்கள்….
அவ்வண்ண வண்ண பூக்களை நம்மவருக்கு கொடுக்கையில் எவ்வளவு மகிழ்ச்சி….
மழைக்காலத்தில் வானவில்லை காணகையில் எத்தனை குதூகலம்…
அவ்வானவில்லின் வர்ணங்கள் அனைத்தும் நம் வாழ்விலும் நிறைந்து இருக்கட்டும்….
வண்ணத்துப்பூச்சி போல் நம் வாழ்விலும் வர்ணங்களும் மகிழ்ச்சிகளும் நிறைந்து இருக்கட்டும்….
வாழ்வில் வண்ணங்கள் மட்டும் இல்லையென்றால்….
நம் எண்ணங்களுக்கு எல்லை இருந்திருக்குமோ என்னவோ?
பெருகட்டும் வண்ணங்கள்…! வளரட்டும் எண்ணங்கள்…!
✍🏻 கவி மதி என்னும் கார்த்திகா முருகானந்தம்.
படம் பார்த்து கவி: நீல நிறம்
previous post