நீல நிலவே
வட்ட வடிவ
நீல வண்ண வாண் மதியே,
மெளிரூட்டும் உன் தேகத்தில்
மெல்லிய கோடு
இழைத்தது யாரோ…
நட்சத்திர பட்டாலங்கள்
உன்னோடு போட்டியிட்டு
தோற்றனவோ…
வான் மேகங்களை
விரட்டியடித்து…
நட்சத்திர பட்டாலங்களை
தோற்கடித்து…
நீல நிற திரை போல்
திரண்டு நிற்கும் விண்ணுக்கு
முன்னாள் முழு மதியாய்
இரவை ஆட்சி செய்யும்
நீல நிலவே
உன் அழகில் உறைந்து
போனேன் நானே….
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.