நெஞ்சம் நிறைந்த
காதல் பொங்கிடவா….
அகிலம் முழுதும்
ஆனந்தம் பொங்கிடவா…
அன்பும் பண்பும் பொங்கிடவா…
அவள் கால்களை
உன் கால்கள் மீது வைத்தாய்…?
அவள் பாதங்களை
உன் மடி மீது தாங்கியிருந்தால் காதல் என்பேன்….
பூப்போன்ற பாதங்களை
உன் கை விரல்கள் தாங்கியிருந்தால்
காதல் என்பேன்…
அவள் கால்களை
உன் கால்கள் மேல் வைத்தது பேரின்பம்
பொங்கிட தானே…?
இங்கு அன்புக்கும்
இடமில்லை…
பண்புக்கும் இடமில்லை…
அவள் கால்களை பிடித்தது
அவள் கால்களை வாரிவிட தான் என்பதை
அவள் அறியவுமில்லை…
உணரவுமில்லை…
அவள் உண்மை காதல்
அவள் அறிவை ஆட்கொண்டது.
போங்கடா நீங்களும்…
உங்கள் காதலும்…..
M. W Kandeepan
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
