நொறுங்கிப் போனதடி இதயம் அப்பளம் போல்… என்னை விட்டு விலகிச் செல்லச் செல்ல…
தொட்டுக் கொள்ள அப்பளம் வேண்டுமென்றேன்… ஏன் நானில்லயா எனக் கேட்டாள் வெட்கச் சிரிப்புடன் முத்தமொன்று பரிமாறும் முன் உணவொன்றை கொடுத்து விடடி…
உணவருந்தும் போது உடைக்கப்படும் அப்பளங்கள் பல நேரங்களில் பசியையும் சில நேரங்களில் ருஷியைப் தீர்மானிக்கின்றன…
ஒன்று மட்டும் ஒன்று மட்டுமென எடுத்த அப்பள ங்கள் அம்மாவின் பங்கென உணரும்போது அம்மா இல்லை உணவருந்த…
இறுகப் பிடித்த உறவுகள் அப்பளம் போலத் தான்… என்றாவது பொரியும் யாரேனும் உடைத்தால் இனி இணையாதென பிரியும்…
சாதா உணவை சிறப்பு உணவாக மாற்றுகிறது இந்த அப்பளம் எல்லாச் சண்டையையும் சிரித்தே மயக்கும் உன்னைப் போல் …
கங்காதரன்