பக்கத்து வீட்டு மாமா வீட்டில்
பழுத்து தொங்கி விழும்
சிவப்பு நிற பாதாம் பழம்
பொருக்கி எடுத்து
அடித்து பிளந்து
கிடைக்கும் சிதறிக்கிடைக்கும்
சிறு துளியை நண்பர்களுடன் பகிர்ந்துண்டு சுவைத்த சுவை
ஒட்டிக் கொண்டது நாவில்
சிறிதெனினும்
மனதில் நின்ற சுவை அலாதி
இன்றும்
என் நாவில்!!!
கவிஞர் வாசவி சாமிநாதன்
