பால்வெளியில் படுக்கும் போதும்
பேனே உந்தன் ஞாபகம்
மார்கழி பனியிலும் மனம்
ஏனோ உன்னை தேடிடும்
சிறகுகளை நீயும் சிறையில்
வைத்தே ஓடுவாய்
ஏனோ நான் மட்டும் சிறை பட்டு
உன் முன்னே தூங்குவேன்
உந்தன் வரவை எண்ணி பார்க்கையில்
எந்தன் மனது மழலையாய் மாறுது
பனை ஓலை காத்தாடி யாய்
பழைய நினைவு சுற்றுது
இலவசமாக நீயும் எங்கள்
இல்லங்களுக்கு வந்ததாலே
உந்தன் செல்வாக்கு இன்று
செல்லா காசாய் போனது
சர் கணேஷ்