ஒற்றை புள்ளியின் ஆக்கம்
பிரபஞ்சமாய்…
ஒற்றை பிரபஞ்சத்தின் வெம்மை
பாற்கரனாய்…
ஒற்றை பாற்கரனின் தேவதை
மேதினியாய்…
ஒற்றை மேதினியின் தீராகாதலன்
பனிநிலவனாய்…
ஒற்றை பனிநிலவனின்
எண்ணற்ற மின்மினிகள்
விண்மீன்களாய்…
பிரபஞ்சமே பேரழகு
என்று பறைசாற்றும்…..!
✍️அனுஷாடேவிட்