படம் பார்த்து கவி: பூந்தொட்டி

by admin 1
26 views
  • பூந்தொட்டி *
    பஞ்சமில்லா பூக்களுக்கு;
    வஞ்சமில்லா வடிவமில்லா
    பூந்தொட்டிகளும் ஏராளம்; ….
    பாதம் படா மலர்களோ
    பாதணிக்குள் பக்குவமாய்
    பூத்து குழுங்குகின்றன ;….
    ஈரமில்லா கற்களுக்கு
    இடையில் கூட பசுமை
    பூத்து குழுங்குவது போல்;….
    அடுக்கடுக்காய் பூத்த
    மாட மாளிகைகளுக்கு
    அழகூட்ட இயற்கை அன்னை
    தந்த பூக்கலை தாங்கி பிடிக்க
    வாராயோ என்று பாதம்
    தொட்டு வணங்கினேன்
    பாதனியையே தந்துவிட்டாள்
    தாராளமாய் ;….
    வண்ண வண்ண பூக்கலை
    வியந்து பார்த்தாலும்
    விந்தையான பூந்தொட்டிகளில்
    வைத்து ரசித்து பார்க்க
    ரசனை மட்டுமின்றி;…
    ரம்யமான யோசனையும் வேண்டும் ;…….

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!