உன் வண்ணத்தை பூசி மஞ்சளுக்குத் தருகிறாய் வண்ணத்தை…
அழகியான உன்னை பேரழகியாக்கி கர்வம் கொண்டது மஞ்சள்…
ஒற்றை முத்தத்தை பரிசளித்து கூடவே உன் மஞ்சள் வாசத்தை விட்டுச் செல்கிறாய் உன் நினைவாக…
ஆற்றுக் குளியலில் நீ பூசிய மஞ்சள் கல் எனக்கு சாமி சிலை…
கங்காதரன்