நீ இருக்கும் இடம்
செல்வம் செழிக்குமாம்
பணம் கொட்டுமாம்
வீட்டைச் சுற்றி உன்னை வளர்த்தேன்
காணும் இடமெல்லாம் நீ
மீன் தொட்டியிலும் நீ
கண்ணாடி பாட்டில் எல்லாம் நீ
ஏன் சமையல் அறையில் கூட நீ
பணம் என்ன இலை கூட கொட்டவில்லை
ஆனால் கிடைத்தது புத்துணர்ச்சி
காலை எழுந்ததும் அவசர அவசரமாக
சமையலறை வந்தால்
உன் பின்னே ஆதவனின் ஒளியில்
பிரகாசமாக மின்னுவாய்
இன்ஸ்டென்ட் காஃபி குடித்தது போல்
இன்ஸ்டென்ட் புத்துணர்ச்சி தோன்றும்
பால்கனியில் அமர்ந்து தேநீர் அருந்தும் போது
தென்னையில் ஒட்டிப் படர்ந்து
ஓங்கி வளர்ந்து பெரிய
இலையை காண்கையில்
உன் இலையில் துயில் கொள்ள
துடிக்கும் மனம்
பணம் வருதோ இல்லையோ
மணிமணியான உன் இலை காண்கையில்
கோடி பணம் கண்ட மகிழ்ச்சி தோன்றும்
செடிச்செடியாக வைத்தால் பணம் வராது
படிப்படியாக உழைத்தால் வரும் பணம்
— அருள்மொழி மணவாளன்