நிலவை பெண்ணுடன் ஒப்பிட்டு சொல்லுதல் பழமை!
ஆனாலும்
அதுவே உண்மை!
பிரபஞ்ச வெளியில் எத்தனை எத்தனை நிலவுகள்!
நிலவில் உள்ள களங்கமும் அழகு!
என் மதிமுகத்தால்,
உன் முகத்தில் உள்ள பருவும் அழகு!
சூரியனால் பெருவெளிச்சமுரும்
மதியை ஒத்து
என்னாலே உன் முகமும் பொலிவடைகிறதே!
நிலவினை ஆய்வு செய்யும் கூட்டம் கூட
தோற்றுவிடுமடி!
பெண்ணை ஆய்வுச் செய்ய கிளம்பினால்.
இப்படிக்கு
சுஜாதா
படம் பார்த்து கவி: மதி முகத்தால்
previous post