உன் தலையில் இருந்து உதிர்ந்த
மயிலிறகு(முடி)
நீ நகவெட்டியால் வெட்டி எறிந்த நகம்,
நீ நடந்து சென்ற காலடி மண்,
கோயில் பரிகாரத்தில் நீ பாதி இட்டுசென்ற
திரு நீறு,
நீ அணு,அணுவாய்
ருசித்து சாப்பிட்டு
தூரம் எறிந்த
சாக்கலேட் உறை,
பள்ளி அறையில்
உனக்கு தெரியாமல்
உன் பையில் இருந்து திருடிய-உன்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-என்
இதய(இட) புற பாக்கெட்டில்
பத்திரமாய் உள்ளது.
நீ குப்பையாக நினைத்தவைகள் எல்லாம்
பொக்கிஷமாய்
என்னுடன் இருக்கின்றன
ஆனால்
என் பொக்கிஷமான நீ மட்டும்
எனக்கு கிடைக்காமலே போய் விட்டாய்?
-லி.நௌஷாத் கான்-