இருண்ட அம்புலி ஒளியில் நிழல் உருவாக,
வீசிய வளி பாடியது புது ராகம்,
மனதில் மெல்லிய நடனம், நிசப்தம் நுழைந்தது,
இறந்தவர்கள் நிழலாய், மீண்டும் உயிர்
பெற்றார்களோ என்ற
பய உணர்வை தந்ததே!
இருள் மட்டும் தோழனாய், இருளின் குரல்,
வீட்டின் மூலையில், அந்த பேயின் புது மொழி
நான் ஏன் இங்கே, அதற்கும் தெரியாது,
நிழலின் நடையில், அது வந்தே சென்றது.
உஷாமுத்துராமன்