மழலைத் தவளையை கயலென களித்தேன்
கயலில்லை தலைபிரட்டை என தவித்தேன்
தவளை அச்சத்தில் கவலையில் இருப்பேன்
சத்தம் என்றாலோ தாய் மடி தேடி தவிப்பேன்
இளமையில் தவளையை ஏனோ ரசித்தேன்
அதன் சத்தம் மோகமுத்தம் என களித்தேன்
பாறை க்குள் தேரை கண்டு வியப்பேன்
மனிதன் போலே உடல் மாற்றம் உண்டு
கொசு அழிக்க மனிதனுக்கு உற்ற துணை
நீயின்றி வேறில்லை என்று முடிப்பேன்
சர் கணேஷ்
