படம் பார்த்து கவி: முகமூடி

by admin 1
101 views

முகமூடி மனிதர்கள்


உன் சுயநல தீயால்
அகத்தில் வஞ்சகம்
சுமந்து…
புறத்தில் பூ முகம் மலர்ந்து…

பஞ்சம் பிழைத்த
ஏழைகளின் வயிற்றில்
தீயை ஏற்றி ..
செலவம் பெருக இன்பம் கண்ட மானிட….

உன் பாவங்கள் உன்னை விரட்டி
ஒரு நாள் பழிதீர்க்கும் என்பதை ஏன் உணரமறுத்தாய்….

என்னிடம் மண்டியிட்டு
உன் பாவங்களை போக்க நானும் சுயநல வியாபாரிய…?

யதார்த்தம் அறியாமல்
உன் இன்பத்தின் உச்சத்தில்
நீ பித்தன் ஆனாய்…
யதார்த்தம் அறிந்ததால்
பிறர் துன்பத்தின் உச்சம் கண்டு
நான் புத்தன் ஆனேன்!!

— இரா.மகேந்திரன்—

You may also like

Leave a Comment

error: Content is protected !!