முதல் பிடியில் அ என்றாள் அன்பே என்றேன்..
இரண்டில் ஆ என்றாள் ஆம் நீயேதான் என்றேன்
மூன்றில் இ என்றாள் இளித்து நின்றேன்
நான்கில் ஈ என்றாள் ஈகையில்லையா என்றேன்…
ஐந்தில் உ என்றாள் உன்மத்தம் நானேன்றேன்..
ஆறில் ஊ என்றாள் ஊமை காதலன் பாவமென்றேன்..
ஏழில் எ என்றாள் எள்ளி நகைக்காதடி என்றேன்..
எட்டில் ஏ என்றாள் ஏந்திழையை அணைக்கவா என்றேன்..
ஒன்பதில் ஐ என்றாள் ஐயம் வேண்டாமடி என்றேன்..
பத்தில் ஒ என்றாள் ஒத்துக்கொள்ளடி என்றேன்..
பதினொன்றில் ஓ என்றாள் ஓங்காரம் நீதானடி என்றேன்..
பனிரெண்டில் ஔ என்றாள் ஔடதமற்ற விஷமென்றேன்…
பதிமூன்றில் ஃ என்றாள் அவளின் முப்பாற்றிபுள்ளியின் உரிமைக்காரனென்றேன்!
உயிரெழுத்தாய் உயிர்த்தெழுந்தே
குறிலாய் குமைந்து
நெடிலாய் நெருங்கி
மெய்யாய் சமைந்து
உயிர்மெய்யால் உணர்ந்து
தமிழாய் பிறக்கவா
உன்காலில் சரணடையவா..
❣️ கேடி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
