மூவறிவு ஜீவன்களிலிருத்து உன் பயணம் ஆரம்பமாகியது அதனால் தான் உனது பெயர் மூக்கோ…
மூக்கும் முழியுமா அழகா இருக்கு என்பதும் சொலவடை
அதோ போல் மூக்குக்கு மேல் கோபம் என்பதும் சொலவடை
நீ இரு பொருள் பட அழகுக்கும் சினத்திற்கும் பொருந்துகிறாய்.
இது மட்டுமல்லாது உனது தனித்துவம் நுகர்ச்சி என்பதல்லவா …. உனது நுகர்ச்சியின் விளைவால் பசியை தூண்டும் காந்தம் அல்லவா நீ….
- சுபாஷ் மணியன்