ஓவியத்தின் உயிர்
எங்குள்ளது என யார் அறிவார்?
அது உற்றுநோக்கும் நேத்திரத்தின் நயனத்திலுள்ளது..
தீட்டப்படாத ஒரு ஓவியத்தின் ஏக்கம்
இளைப்பாறும் தூரிகையில் எப்போதும் ஒளிந்துக் கொண்டிருக்கும்..
அது வரைந்ததில் வெற்று காகிதம் காரிகையாய் உயிர்க்கொண்டு நாணம் கொள்ளும் நொடிகளுக்காக…
வானவில்லின் வண்ணங்களில் தூரிகைகள் நீராடி
வண்ண ஓவியத்தை புனைவதில் அதன் தீரா பசி அடங்கிடாது
அது
சுவரின்றி வண்ணமின்றி ஆத்மார்த்த நேசத்தை நெஞ்சில் வரையும் காதலுக்கு ஒப்பானது
நேசம் தீட்ட தீட்ட இன்னும் நேசம் வேண்டும் என்று மண்டியிடும் மனசை போன்றே தூரிகைகளும்…!
✍️அனுஷாடேவிட்