வர்ண ஜாலம்
மின்னும் வண்ணங்களில்…
கச்சிதமாய் ஒட்டிய
ரிப்பன்கள்….
பெட்டிக்குள் இருக்கும்
பரிசுக்கு…..
கவர்ச்சி கூட்டும்
வித்தைக்காரர்கள்
நீங்கள்…..
பிரித்ததும்
புகலிடம் அறிந்தும்
வாழும் தருணம் வரை
வர்ண ஜாலம் காட்டுவதில்
உங்களுக்கு நிகர் வேறு
ஒருவர்தான் உண்டோ?
நாபா.மீரா