படம் பார்த்து கவி: விண்மீன்

by admin 2
47 views

நிலாப் பெண்ணோடு
இரவின் நிழலில்
உலா வரும்
நட்சத்திர நாயகனே

இமையின்றி ஒளிர்கிறாய்
இதழின்றி நகைக்கிறாய்
ஓசையின்றி அழைக்கிறாய்

உன் அழகை
ரசித்து பிரமித்த
என்னை அழைத்து
என்ன வேண்டுமென
நீ கேட்டால்……..

உன்னைத் தவிர
என்ன கேட்பேன் நான்🤔
பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!