தலைப்பு; வைகறையில் துயில் எழு
கண்ணாடி ஜன்னல் வழியே
கதிரவன் தன் கரம் நீட்டுது
முன்னாடி கோப்பையிலே தேநீர்
ஆவி மனம் பறப்புது
ஆவியான ஆழி நீரும்
மேகமாய் தான் மாறும்
ஆவி பறக்கும் தேநீரால்
தேசத்துக்கு வேகம் கூடுது
வைகறையில் துயில் எழுந்து
வையத் தலைமை கொள்ள
ஏடு எடுத்து படிக்க வேண்டும்
எனும் எண்ணம் தான் கூடுது
ஏடு எடுத்து படிச்சதால
ஆதவனை அளக்க நினைச்சேன்
கோவப் பட்ட சூரியனும்
கொதிநிலை கூட்டிடுச்சு
யாரு கிட்ட தூது விட்டு
சூரியனை சாந்தம் செய்ய
ஓசோனை தான் அழைச்சேன்
ஓட் டையோடு என்ன செய்ய
குவாட்டருக்கு ஓட்டு போட்ட
குடிமகன்களை எல்லாம் கூட்டி
இனி நூறு மில்லி வேனுமுன்னா
நட்டு வைச்ச மரத்து கெல்லாம்
தண்ணி ஊத்த வேணுமுன்னு
சட்டம் ஒன்னு போடனும்
அதுக்கு நானும்
வையத்தை தலைமை கொள்ளனும்
வைகறையில் துயில் எழனும்
சர் கணேஷ்