எழுதியவர்: குட்டிபாலா
“என்ன சாப்பிடுறீங்க?” என்றதும் நிமிர்ந்த மணிவண்ணனின் கண்களை சர்வரின் காதில் மாட்டியிருந்த ஒற்றைக் கடுக்கன் கவர்ந்தது.
எதிரே வந்து உட்கார்ந்தவர் “ராஜாமணி, பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
72ஆ 73ஆ?” என்றதும் “73 ஆரம்பம்” என்றார் சர்வர் ராஜாமணி.
பரம்பரை சொத்தாக வந்த ஒற்றைக் கடுக்கன் மூன்றாவது தலைமுறையாக அவரிடம் வந்ததாகவும் மூன்று வயதிலிருந்தே அணிந்துள்ளதாகவும் சொன்னார்.
டிப்ஸ் வைத்ததும் “சார், இங்கே யாரும் டிப்ஸ் வாங்க மாட்டோம். எங்களுக்கு வேண்டிய அனைத்தையும் முதலாளி தந்து விடுகிறார். 18 வயதில் வேலைக்கு வந்தவன் இன்றுவரை அவரின் ஆதரவில்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.
“குழந்தைகள்” என்றதும் “ஒரே மகன் ஜெர்மனியில் இன்ஜினீயர். முதலாளியின் மூத்த மகனுடன் கம்பெனி வைத்துள்ளான்” என்றதும் அதிர்ந்தேன்.
கவுண்டரை நெருங்கியதும் “சித்தப்பா ராஜாமணிக்கு பிறந்தநாள்” என்று இனிப்பு கொடுத்த இளைய மகனின் பின்னால் போட்டோவில் அவன் தந்தை –பெரிய முதலாளி.
“ஆம். இவர்கள் குடும்பம் பெரிதே” என்று வியந்தேன்.
முற்றும்.
📍அரூபி தளத்தில் உங்கள் படைப்பை பதிவிட இத்திரியை கிளிக் செய்யவும்.