எழுதியவர்: திருமதி ஜெயந்திரங்கராஜன்
நரேஷ் காலை எழுந்தது முதலே பரபரப்பாக இருந்தான். ஆம் அப்பா இல்லாமல் அம்மாவால் வளர்க்கப்பட்டு, பள்ளிப்படிப்புக்குப் பின் கல்லூரிகட்டணம், ஸ்காலர்ஷிப் மூலமாக மூன்றாண்டு அரசுக்
கல்லூரியில்படித்து, கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாம் மூலமாக தனியார்நிறுவனத்தில் பணியில் சேர்ந்து முதல் மாத சம்பளம் நேற்று வாங்கி வந்தான்நரேஷ்.
திருத்தணியில் உள்ள கலைக்கல்லூரியில் படித்து வந்தான் நரேஷ்.ஆனால் புத்தகங்கள் வாங்க முடியாத நிலை என்ன செய்வது என்ற நிலையில் அருகிலுள்ள ஊருக்குச்
சென்ற போது அம்பத்தூரில் இருந்த விஜயன் என்பவர், அவரின் ஒய்வூதியத்திலிருந்து பணம் கொடுத்து வந்தார். மூன்றாண்டு புத்தகம் வாங்க, மற்றும் இதர செலவுகளுக்காக பெரியவர் விஜயனின், தானம் மூலமாக நன்கு படித்து வேலையும் கிடைத்ததால்,
பெரியவரைப்பார்த்து, அவரிடம் ஆர்டரை காண்பித்து, வேலைக்கு ச்சேர்ந்த விவரம் தெரிவித்து சம்பளம் அவரிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்க நினைத்து கிளம்பினான்.
காலை பெரியவர் விஜயன் வீட்டுக்குச்சென்று அவரை அழைத்து தான் இப்போது பட்டம் பெற காரணமாக இருந்த பெரியவர் படிக்க உதவி செய்ததால் பெரியவர்மற்றும் அவர் மனைவி காலில் விழுந்து ஆசி ப்பெற்ற பிறகு ஆர்டரை காண்பித்து, சம்பளக்கவரை க்கொடுத்து உங்களை என் ரோல்மாடலாக எடுத்துக்கொண்டு படிக்க உதவி செய்வதாக ச்சொல்லி விட்டு வந்தான் நரேஷ்.
பெரியவர் செய்த உதவி ஓருவரை மாற்றியது, மேலும் அவரை ரோல் மாடாலாக்க முடிவு செய்த நரேஷ் வாழ்க வாழ்க.
முற்றும்.
📍அரூபி தளத்தில் உங்கள் படைப்பை பதிவிட இத்திரியை கிளிக் செய்யவும்.