சித்த மருத்துவப்படி அமுக்கராகிழங்கு உடலில் வாத அதிகரிப்பை மட்டுப்படுத்தி, நரம்பையும் தசையையும் வலுப்படுத்துகிறது.
இது வைட்டமின் மாத்திரைக்கு மாற்று மருந்தல்ல. நவீன அறிவியலாலும் பரிசோதிக்கப்பட்டுப் பெருவாரியாகப் பயன்பாட்டில் இருக்கும் வேர் அமுக்கராகிழங்காகும்.

படபடப்பை குறைக்க, மனஅழுத்தத்தை தீர்க்க, மூட்டு மற்றும் தசைவலியை இலகுவாக்கித் தூக்கத்தை வரவழைக்க இக்கிழங்கு பெரிதும் உதவும்.
நரம்புத் தளர்ச்சியைப் போக்கி, ஆண்மைக்குறைவைச் சரி செய்வதாலும் இதற்கு இந்தியன் ஜின்செங் என்ற பெயரும் உண்டு.
அமுக்கராவைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிடுவது சிறப்பாகும். இருப்பினும், இக்கிழங்கை மருத்துவர் ஆலோசனையுடன் சாப்பிடுவது நன்று.