அரூபி வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
மகளிர் மாதமான மார்ச்சை, முன்னிட்டு, அரூபி தளத்தில் 2025ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்கான போட்டி தொடங்கிவிட்டது.
📌போட்டி தலைப்பு: வஞ்சி சொல்லும் கதை!
மங்கையர் தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு, இம்முறை அரூபி தளத்தில் வித்தியாசமான கோணத்தில் 31 படங்கள் போட்டிக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் உங்கள் மனம் கவர்ந்த படங்களுக்கு நீங்கள் விரும்பும் வகையில் கதைகளை எழுதி அனுப்பிடலாம்.































🔏போட்டி விதிமுறைகள்:
🖊️ஒருவர் பல கதைகள் எழுதிடலாம்.
🖊️வார்த்தைகள்: 500க்குள் இருந்திட வேண்டும்.
🖊️கதைக்களம்: எழுத்தாளர்களின் விருப்பத்தேர்வாகும். விஞ்ஞானம், மெய்ஞானம், திகில், சமூகம், காதல், வரலாறு என்று உங்களுக்கு பிடித்தமான எவ்வகையை (genres) வேண்டுமென்றாலும் முன்னிறுத்தி உங்கள் கதையை நீங்கள் எழுதிடலாம்.
🖊️போட்டி வரையறை: 08.03.2025 – 31.03.2025
(இன்றைக்கே கதைகளை எழுதி அனுப்பிட விரும்புவோர் தாராளமாய் அனுப்பிடலாம். அவை நாளைத் தொடங்கி அரூபி தளத்தில் பதிவிடப்படும்.)
📩 படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: 2022arubi@gmail.com
📌கட்டாயம் மின்னஞ்சலில் இணைக்க வேண்டிய குறிப்புகள்:
💎எழுத்தாளர் பெயர்
💎கதையின் தலைப்பு: மேலே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தின் எண்களை உங்கள் கதையின் தலைப்பாய் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
கீழே கொடுத்திருக்கும் உதாரணத்தை கருத்தில் கொள்ளவும்.
💥தேர்ந்தெடுக்கப்பட்ட படம் / தேர்வு செய்த படம்: படம் 10 (கட்டாயம்)
💥கதையின் தலைப்பு: சில்லென்ற சித்திரம்
💎சுய சிந்தனையில் உதிக்கும் சுவாரசியமான தலைப்புகளையே உங்கள் கதைக்கு தலைப்பாய் சூட்டிட தளம் பரிந்துரைக்கிறது.
💎அலைபேசி எண்
💎ஜிபே எண் (G pay Number and Person Name)
📌கதையை Ms Word அல்லது ஈமெயிலில் நேரடியாக எழுதி அனுப்பிட வேண்டும்.
📌ஒருமுறைக்கு, இருமுறை எழுத்து பிழைகளை சரிப்பார்த்த பின்னர் கதைகளை அனுப்பிடவும்.
📌 எழுத்து பிழைகளை தவிர்த்து, வாக்கியத்தின் முடிவில் ஒற்றை புள்ளி வைத்து (single dot), தேவையான இடத்தில் கோமா (coma), மேற்கோள் குறிகள் (quotation) போட்டு, பத்தி (paragraph) முறையில் எழுதி அனுப்பிடவும்.
📌 போட்டி சம்பந்தமான விடயங்கள் அனைத்தும் கீழ்கண்ட புலன குழுவில் பகிரப்படும். ஆகவே, போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புவோர் கீழிருக்கும் புலன குழுவில் இணைந்துக் கொள்ளவும்.
🔗 Aroobi Vanji Sollum Kathai Group (குழுவின் தற்போதை பெயர்: Aroobi Stop Abuse Story. 10.03.25 மேல் குழுவின் பெயர், Aroobi Vanji Sollum Kathai என்று மாற்றப்படும்.)
📌போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் வரை போட்டிக்கான கதைகளை வேறெங்கும் பதிவேற்ற கூடாது.
⚠️ஏற்கனவே, வேறு தளங்களில் நீங்கள் அல்லது மற்றவர் எழுதி, வெற்றி பெற்ற அல்லது வெளிவந்த படைப்புகளை, அதாவது (அச்சாக, மின்னூலாக, அரூபி தளத்தையும் சேர்த்து) இப்போட்டிக்கு அனுப்புவதை கட்டாயம் தவிர்க்கவும்.
📌போட்டியின் வெற்றியாளர்கள் 2025 ஆம் ஆண்டின் ஜூலை மாத இறுதியில் அறிவிக்கப்படுவர்.
📌வித்தியாசமான முறையில் கவர்ந்திழுக்கும் படி எழுதப்பட்டு, அதிக மதிப்பெண்கள் பெரும் தரமான மற்றும் சிறந்த படைப்புகளே வெற்றி பட்டியலில் இடம் பெரும்.
📌வெற்றி பெறும் தகுதியான 10 வெற்றியாளருக்கான மின்சான்றிதழ் மற்றும் அன்பளிப்பு தொகையும் (நீதிபதியின் நிதிக்கும் & விதிக்கும் உட்பட்டு வழங்கப்படும். ஆகவே, இது தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.)
📌பங்கேற்கும் அனைவருக்கும் மூன்று மாதத்திற்குள் பங்கேற்பாளர் மின்னியல் நற்சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.
📌அரூபி தளம் தன்னார்வலர் தளமாகவே செயல்படுகிறது என்பதனை கருத்தில் கொள்ளவும்.
📌போட்டிக்கான கதைகள் அனைத்தும் மூன்று நாட்களுக்குள் அரூபி தளத்தில் பதிவிடப்படும்.
📌 அவைகளின் திரிகள் அரூபி தளத்தின் அதிகாரபூர்வ குழுக்களில் பகிரப்படும். இணையாதவர்கள் இணைந்துக் கொள்ளவும்.
🔗Aroobi Official What’s Application Channel
🔗Aroobi Official Tamil Website Facebook Page
🔗Aroobi Official Facebook Group
வாசகர்கள் அனைவரும் தொடர்ந்து உங்கள் ஆதரவை அரூபி தளத்திற்கு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு அரூபி தளம் புதிய முயற்சியில் களம் இறங்கியுள்ளது.
ஆகவே, போட்டிகளில் உற்சாகமாய் கலந்துக் கொண்டு தொடர்ந்து அரூபியோடு பயணிப்பீர்களாக.
போட்டியை பற்றிய சந்தேகங்கள் இருப்பின் தனிப்பட்ட முறையில் வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி அனுப்பி தெளிவுப்படுத்தி கொள்ளவும்.
நன்றி. வணக்கம்.