அறுசுவை அட்டில் : காய்கறி குருமா

by Admin 4
12 views

காய்கறி குருமா

✴️தேவையான பொருட்கள்:

🔹காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி, சன்னா) – 2 கப்

🔹பெரிய வெங்காயம் – 1

🔹பெரிய தக்காளி – 2

🔹உப்பு – தேவையான அளவு

✴️அரைக்க 1:

🔸பச்சை மிளகாய் – 2

🔸இஞ்சி – 1 சிறு துண்டு

🔸பூண்டு – 3 பல்

🔸சோம்பு – 1/4 தேக்கரண்டி

✴️அரைக்க 2:

▪️தேங்காய் துருவல் – 1/2 கப்

▪️முந்திரி – 5

▪️பொரிகடலை – 1 தேக்கரண்டி

✴️தாளிக்க:

🔻எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி

🔻பட்டை – சிறு துண்டு

🔻லவங்கம் – 2

🔻ஏலக்காய் – 2

✴️செய்முறை:

💠காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து வைக்கவும்.

💠அரைக்க 1’ல் இருப்பவற்றை தனியாகவும், 2’ல் இருப்பவற்றை தனியாகவும் நைசாக அரைக்கவும்.

💠பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.

💠இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

💠இதில் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த கலவை சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.

💠நன்றாக வதங்கியதும் வேக வைத்த காய்கறி கலவை மற்றும் தேங்காய் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு எடுத்து பரிமாறவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!