அறுசுவை அட்டில் : கால்சியம் தோசை

by Admin 4
62 views

✴️கால்சியம் தோசையும் இரண்டு வகை சட்னியும்

✴️கால்சியம் தோசை னு சொல்றது வேற ஒன்னும் இல்லைங்க நம்ம ராகி தோசை தான்

✴️வெறும் ராகி மாவை தண்ணில கலந்து சுடுறப்போ அந்த தோசை இவ்வளவு மொறு மொறுப்பா வராது

✴️ராகியுடன் அரிசியும் ஊறவைத்து அரைத்து தோசை சுடும் போது சுவையாக இருக்கும்.

✴️குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை

🔹இரண்டு கப் ராகி / கேழ்வரகு

🔹ஒரு கப் புழுங்கல் அரிசி
🔹கால் கப் உளுந்து
🔹ஒரு தேக்கரண்டி

🔹வெந்தயம்

சேர்த்து நன்கு கழுவி ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்

✴️ஊறிய அரிசியையும் ராகியும் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்

✴️ மாவில் உப்பு சேர்த்து உடனடியாகவும் தோசை சுடலாம் அல்லது 2 மணி நேரம் புளிக்க செய்தும் தோசை சுடலாம்

தேங்காய் சட்னி

🔻 தேங்காய் அரை கப்
🔻 பொட்டுக்கடலை கால் கப்
🔻 பச்சை மிளகாய் இரண்டு
🔻 கருவேப்பிலை 5
🔻 தேவையான அளவு உப்பு

சேர்த்து அரைத்து தாளிப்பை சேர்க்கவும்

தக்காளி சட்னி

🔸ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி, மூன்று தக்காளி மற்றும் இரண்டு காய்ந்த மிளகாயை நன்கு வதக்கி மல்லி இலையும் தேவையான உப்பும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்

பகிர்வு

You may also like

Leave a Comment

error: Content is protected !!