அறுசுவை அட்டில் : கோதுமை ஃபலூடா

by Admin 4
62 views

தேவையானவை :

கோதுமை மாவு – அரை கப்

வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

வெனிலா ஐஸ்கிரீம் – ஒரு சிறு கரண்டி அளவு

பொடித்த சர்க்கரை – 3 டீஸ்பூன்

ஐஸ் கட்டிகள் – 10

மாம்பழக் கூழ் – 2 டேபிள் ஸ்பூன்

மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் – 2 டேபிள் ஸ்பூன்

பச்சை ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை

பொடித்த முந்திரி – ஒரு டீஸ்பூன்

வேஃபர் பிஸ்கட் – 2

செய்முறை :

கோதுமை மாவை சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக பிசைந்து வைக்கவும்.

அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் நீர் விட்டு கொதிக்க விடவும்.

அடுப்பை ‘சிம்’ ல் வைத்து, ஓமப்பொடி   நாழியில் பிசைந்த மாவைப் போட்டு, பரவலாக கொதி நீரில் நூடுல்ஸ் போல பிழிந்து, வெண்ணெய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

நீரில் வெந்த நூடுல்ஸை வடிகட்டி, ஐஸ் கட்டிகளை அதன் மேல் போட்டு அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

இதை ஒரு வடிதட்டியில் போட்டு வைக்கவும்.

ஒரு நீண்ட கண்ணாடி கிளாஸில் முதலில் வடிகட்டிய நூடுல்ஸ் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்க்கவும்.

மேலாக ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.

அடுத்து ஃப்ரூட் ஜாம் இரண்டு டீஸ்பூன் போட்டு, மேலாக ஒரு டீஸ்பூன் சர்க்கரை போடவும்.

அடுத்து மாம்பழக்கூழ் போட்டு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை போடவும்.

இதன் மேல் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து, சிட்டிகை பச்சை ஃபுட் கலர் சேர்க்கவும்.

மேலாக முந்திரிப் பொடியை தூவி, வேஃபர் பிஸ்கட்டுடன் பரிமாறவும்.

#பகிர்வு

You may also like

Leave a Comment

error: Content is protected !!