✴️உடைத்து ஊற்றும் முட்டை குழம்பு
♦️தேவையான பொருட்கள்:
💠5 முட்டை
💠5 தக்காளி
💠½ மூடி தேங்காய்
💠½ தேக்கரண்டி பெருங்காயம்
💠20 சின்ன வெங்காயம்
💠3 பச்சை மிளகாய்
💠10 பல் பூண்டு
💠2 கொத்து கருவேப்பிலை
💠சிறிதளவு கொத்தமல்லி
💠1 தேக்கரண்டி கடுகு
💠1 தேக்கரண்டி சீரகம்
💠½ தேக்கரண்டி வெந்தயம்
💠½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
💠1 தேக்கரண்டி மிளகாய் தூள்
💠2 தேக்கரண்டி மல்லி தூள்
💠1 மேஜைக்கரண்டி சாம்பார் தூள்
💠100 மில்லி எண்ணெய்
💠உப்பு
♦️செய்முறை:
💠முதலில் சிறிய வெங்காயம், தக்காளி,தேங்காய் இவை அனைத்தும் நறுக்கி கொள்ளவும்.
💠பின்பு ஒரு மிக்சி ஜாரில் தேங்காய்,மஞ்சள் தூள்,மிளகாய் தூள், சம்பார் தூள் இவை அனைத்தும் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
💠ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு,வெந்தயம்,சீரகம்,10 பல் பூண்டு,பெருங்காயம், கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
💠பிறகு, வெட்டி வைத்த தக்காளி யும் சேர்த்து நன்றாக வதக்கவும்
💠பின்பு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.
💠பின்பு, அரைத்த விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விடவும்.
💠நன்றாய் கொதி வந்ததும் அடுப்பை குறைத்து விட்டு முட்டையை உடைத்து ஊற்றவும்.
💠பின்னர், 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து முட்டை வெந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.