ஆணை தூண்டிலிடுங்கள்

by Nirmal
270 views

சிற்றின்ப உணர்வுகள் நபருக்கு நபர் மாறுபடும்.

ஆணின் பாகங்கள் பெரும்பாலும் உயர் உணர்வுகளை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டவை.

இவை உடலுறவுத் தேவை மற்றும் உணர்வுகளை தூண்டக்கூடியவை.

1. பிறப்புறுப்பு பகுதி

பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்குறியே முதன்மையாக இருக்கும்.

இதன் தலை, தண்டு மற்றும் விதைப்பை ஆகியவை தொடுதல் மற்றும் தூண்டுதலுக்கு உணர்திறனை வழங்குகின்றன.

இவை பாலியல் தூண்டுதலுக்கு முதன்மையாக காணப்படினும், நபருக்கு நபர் வேறுப்படும்.

2. மார்பு மற்றும் முலைக்காம்புகள்

மார்பு மற்றும் முலைக்காம்பிலிருந்து ஆரம்பிப்பது பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் பிடித்தமான ஒரு விடயமே.

முலைக்காம்புகளில் ஏராளமான நரம்பு முனைகள் உள்ளன. அவை சரியாகத் தூண்டப்படும்போது, பாலியல் உற்சாகத்தை அதிகரித்து தடையற்ற உடலுறவுக்கு வழிவகுக்கும்.

3. பெரினியம்

இது ஆசனவாய்க்கும் விதைப்பைக்கும் இடைப்பட்ட பகுதியாகும்.

இது ஆண்களுக்கு பல நரம்பு முடிவுகளை இணைக்கும் இடமாக உள்ளது. இந்த மென்மையான பகுதியில் கலவியை தூண்டுவதன் மூலம் ஆண்களின் இன்பத்தை அதிகரிக்கலாம்.

4. கழுத்து மற்றும் காதுகள்

இவை அதி உணர்திறன் கொண்ட பகுதிகளாகும்.

இவற்றில் முத்தமிடுதல், நாவால் வருடுதல், மற்றும் மென்மையாக தடவுதலின் மூலம் நம்பமுடியாத அளவிற்குத் தூண்டுதலை எகிற வைக்க முடியும்.

ஏனெனில், இச்செயல்கள் நரம்பு முடிவுகளைத் தூண்டி ஆண்மை உணர்வுகளை அதிகரிக்கும்.

5. உதடுகள்

முத்தம் என்பது அனைவருக்கும் உணர்வை தூண்டக்கூடிய ஒரு நெருக்கமான செயலாகும்.

மென்மையான, உணர்ச்சிமிக்க இதழ் முத்தங்கள் பாலியல் ஆசையை அதிகரிக்கும் வல்லமை கொண்டவை.

இந்த முத்தத்தின் நேர அளவும் இதழ் அழுத்தத்தின் தேவையும் நபருக்கு நபர் வேறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் ஒவ்வொரு நபருக்கும் சிற்றின்ப உணர்வுகளில் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

புரிந்துணர்வுடனும் பரஸ்பர தொடர்புடனும் நடைபெறும் செயற்பாடுகளின் முடிவுகள், திருப்திகரமானதாக அமையும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

You may also like

1 comment

Avatar
S.Asuvathi September 29, 2023 - 4:32 pm

👩‍❤️‍💋‍👨😇

Leave a Comment

error: Content is protected !!