க்ளையண்ட்ஸ் ஹேண்டில் பண்ணின அனுபவத்துல சிலத சொல்றேன்.
**இந்திய ஆண்களுக்கு, எந்த நாட்டுல செட்டில் ஆகி இருந்தாலும் மனைவியோட தேவை புரியிறது இல்ல. சில மனைவிகள் fantasy விரும்புறாங்க. சிலர் intimate நேரத்துல கூட ஒரு shawlஆச்சும் வேணும்ன்றவங்க.
**””இதுக்கு”” தான கல்யாணமே பண்றோம், cooperate பண்ணல, புரிஞ்சுகலைனு சொல்ற கணவர்கள பாக்கறோம். தன் தேவையை நிறைவேத்திக்க கூட அவங்களுக்கு தெரியலைன்றது தான் உண்மை.
உணர்ச்சிகள்/ உடல்நிலை சரியா இருக்க மனைவிகள foreplay and talks மூலமா எந்த ஒரு கணவராலயும் முடியும். (கவுன்சிலிங் பிறகு இப்ப happya இருக்கோம் நன்றினு சொல்றப்போ, இந்த பாயிண்ட் எவ்ளோ validனு தெரியும்)
**முடியாதுனு சொன்னா சரியான மனைவி இல்லை, அடிக்கடி முடியாதுனு சொன்னா கணவர் கைவிட்டு போயிடுவாருனு பல மனைவிகள் கடமையேனு பண்றாங்க. “”இது முக்கியமில்லை, நீதான் முக்கியம்””னு புரிய வைக்கிறது கணவர்-மனைவி ரெண்டு பேரோட கடமை. அத பலர் செய்யிறதில்லை.
** ஆர்கஸம்னா என்ன, உனக்கு ஆர்கஸம் கிடைச்சிருக்கா? எப்ப? கிடைக்கலைனா சொல்லிருக்கியா? இனி சொல்லுனு எத்தனை தம்பதிகள் பேசுறாங்க.??? கலவி வெச்சுக்கலாம். ஆனா கலவி பத்தி discuss பண்றதுனா ரெண்டு பேருக்குமே taboo topic.
**நீ porn பாக்குறது பிடிக்கலை, கண்டவங்களோட chat பண்றது பிடிக்கலைனு ஒரு மனைவி/கணவன் சொல்றாங்கனா அத மதிக்கனும். அவங்க இல்லாதப்போ ரகசியமா பண்ணி ப்ரச்சனைய மேலும் complicate பண்ணிக்கிறாங்க.
** இன்னொருத்தரோட சகஜமா பேசுறத இந்திய கலாச்சார மனசு இப்ப வரை ஏத்துக்கலை. ஆணோ பெண்ணோ தன் கணவரோ/ மனைவியோ/காதலரோ ” பண்ணாத பிடிக்கலை”னா பண்ணாதீங்க.
இல்ல இது என் சுதந்திரம்னா, அவங்களோட முழு பாசத்தையும் எதிர்பாக்காதீங்க. பழிவாங்க chat பண்றவங்கள பாத்து இருக்கேன்.
**generalize பண்ணி பொண்ணுனா இப்டிதான், ஆண்கள்னா இப்டிதான்னு சொல்லிடலாம். ஆனா each n everyone is an unique individual.
வலியோ சந்தோஷமோ எல்லாருமே ஒரே மாதிரி ஃபீல் பண்ண மாட்டாங்கன்றப்போ செக்ஸ மட்டும் எப்டி இவங்க இப்டிதான்னு சொல்றாங்கனு புரியலை.
**அதை ஆத்மார்த்தமா நம்புற வெகுளி பேச்சிலர்கள்தான் பாவம். performance, target achievementsனு செக்ஸ வேலைபோல அணுகறாங்க.
**இங்க ஒரு போஸ்ட் அடிக்க அங்க ஒரு லைஃப் குழம்புது. பகுத்தறியவும் மாட்டாங்க. நேர்ல சந்திச்சா தன் “”திறமையால”” கோவத்தை குறைக்க முடியும்னு நம்புறவங்க பெரும்பாலானோர்.
Don’t generalize, don’t glorify, don’t brag.
©Ramyavarshini
behavioural trainer
psychologist