ஆரோக்கியமான யோனியைப் பராமரிப்பது என்பது இன்றியமையாத ஒன்றாகும்.
1. சுத்தம் மற்றும் மென்மையான முறையை கையாளுதல்

வெளிப்புற பகுதியை வெதுவெதுப்பான நீரால் வாசனை இல்லாத சோப்பைப் பயன்படுத்தி கழுவ வேண்டும்.
அதீத ரசாயனம் கொண்ட சோப் அல்லது திரவம் இயற்கையான பி.எச் (pH) அளவின் சமநிலையை சீர்குலைத்து தொற்றுநோய்களை ஏற்படுத்தும்.
2. துடைக்கும் நுட்பம்

ஆசனவாயிலிருந்து பிறப்புறுப்புக்கு பாக்டீரியா பரவுவதைத் தடுக்க, கழிப்பறைக்குச் சென்ற பின்பு எப்போதும் முன்னிருந்து பின்பக்கமாக துடைக்கவும்.
3. காற்றோட்டமான பேண்டிஸ்களை தேர்ந்தெடுங்கள்

ஈரப்பதம் அதிகரிப்பதைத் தடுக்கவும், தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறவும், பருத்தியிலான பேண்டிஸ்களை அணியவும்.
4. எரிச்சலூட்டும் பொருட்களைத் தவிர்க்கவும்

வாசனைமிக்க டம்போன்ஸ் (tampons), மாதவிடாய் பட்டைகள், உடலுறவுக்கு பயன்படுத்தப்படும் நறுமண திரவியங்கள் தவிருங்கள்.
இவைகள் உங்கள் அந்தரங்க பகுதியின் இயற்கை நறுமணத்தை தடை செய்து அப்பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தும்.
5. மாதவிடாயின் போது கவனம்

மிஸ் ‘வி’ சுத்தமாய் கழுவி நன்றாக பராமரிக்கவும். தொற்று நோய்களை தடுக்க அடிக்கடி பேட்கள் அல்லது டம்போன்ஸ்களை மாற்றவும்.
6. பாதுகாப்பான உடலுறவை நடைமுறைப்படுத்துங்கள்

பாலியலால் பரவும் நோய்த்தொற்றுகளிலிருந்து (STIs) பாதுகாப்பு பெற, ஆணுறைகளை பாதுகாப்பு அம்சமாக பயன்படுத்தவும்.
பாலியல் நடவடிக்கைகளை அடிக்கடி மேற்கொள்ளும் பட்சத்தில், தேவையான பரிசோதனைகளையும் அடிக்கடி மேற்கொள்வது சிறப்பாகும்.
7. நீரேற்றத்துடன் இருங்கள்

அப்பகுதியின் வறட்சித் தன்மையை தடுக்க, நிறைய தண்ணீர் குடியுங்கள்.
8. உடலுறவின் போது முறையான சுகாதாரத்தை கடைபிடிக்கவும்

உடலுறவுக்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழிப்பதன் வழி பாக்டீரியாவை வெளியேற்றவும்.
இச்செயல்பாடு சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் (UTIs) ஏற்படுவதை குறைக்க உதவும்.
9. வரையறுக்கப்பட்ட ஆண்டிபயாடிக் பயன்பாடு

தேவைப்படும் போது மட்டுமே இவ்வகையான மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
10. வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள்

அசௌகரியத்தை உணரும் பொருட்டு உடனடியாக மருத்துவரை சந்திக்கவும்.