உங்கள் உள்ளம் ஏதோ ஒன்றைக் கூறுகிறது…. நீங்கள் இருக்கும் இடம் சரியில்லை என்று… அப்படி அது கூறினால் அதை கேளுங்கள்.
ஒரு வயலினிஸ்ட் நியூயார்க் மெட்ரோவில் பாதையில் 45 நிமிடங்கள் மிகத் திறமையாக வயலின் வாசித்தார். சிலர் மட்டும் நின்றனர், ஒரு சிலர் கை தட்டினர், வயலினிஸ்ட் சுமார் $30 டொலர்கள் மாத்திரமே அங்கே சம்பாதித்து இருந்தாராம்.
ஆனால் அந்த வயலினிஸ்ட் உலகின் சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவரான ஜோஷுவா பெல் என்பதை யாரும் அங்கு அறிந்திருக்கவில்லை. அந்த மெட்ரோவில் பாதையில் ஜோஷுவா, மிகக் கடினமான வயலின் இசைக் கோர்வைகளை வாசித்தார், அது 3.5 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மெட்ரோ நிகழ்வுக்கு இரண்டு நாட்கள் முன்பு, அதே ஜோஷுவா பெல் அமெரிக்க பொஸ்டன் நகரில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு, ஒவ்வொரு டிக்கெட் 100 டொலர்களுக்கு வாங்கப்பட்டு அரங்கே நிறைந்திருந்தது.
இது நீங்கள் எவ்வளவு தான் அதிசயத்தக்க திறமையிக் கொண்டு இருந்தாலும், இருக்க வேண்டிய இடத்தில் இல்லாவிட்டால் எல்லாமே வேஸ்ட் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
நல்ல திறமை கொண்டவர்கள் அடையாளம் காணப்படாமல் எல்லா இடத்திலும் உள்ளனர், ஆனால் அவர்கள் தகுந்த அங்கீகாரம் மற்றும் பாராட்டைப் பெறுவதில்லை. ஆனால் அவர்கள் தங்களுக்கான மதிப்பையும் தன்னம்பிக்கையையும் உருவாக்கி, தங்களுக்கு உதவாத சூழலிலிருந்து விலகும் போது, அவர்கள் வளர்ச்சியடைந்து திகழ்கிறார்கள்.
உங்கள் உள்ளம் ஏதோ ஒன்றைக் கூறுகிறது…. நீங்கள் இருக்கும் இடம் சரியில்லை என்று… அப்படி அது கூறினால் அதை கேளுங்கள்!
நீங்கள் மதிக்கப்படுகிற இடத்திற்கு செல்லுங்கள். உங்கள் மதிப்பை அறியுங்கள்.
#படித்ததில் பிடித்தது